ADDED : ஏப் 19, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் (மடீட்சியா) ஆண்டு விழா தலைவர் செந்திகுமார் தலைமையில் நடந்தது. கவுரவ செயலாளர் அசோக் ஆண்டறிக்கையை வாசித்தார். ஒருங்கிணைப்பாளர்கள், சங்க நிர்வாகிகள், துறைசார்ந்த கண்காட்சி தலைவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரூட்ஸ் இண்டஸ்டிரிஸ் இயக்குநர் கவிதாசன் சிறந்த தொழில்நிறுவனங்களுக்கான விருதுகளை வழங்கினார். அவர் பேசுகையில், 'தன்னம்பிக்கையுடன் கூடிய தலைமை, அக்கறையுள்ள குடும்பம், நேர்மையுள்ள வியாபாரம், அக்கறையுள்ள சமூகம் ஆகிய நான்கும் ஒருங்கிணைந்தால் மனிதனின் வாழ்வு முழுமையடையும்' என்றார்.
