ADDED : செப் 07, 2026 12:54 AM
'மொத ராத்திரி'க்காக 6 ஆண்டுகள் காத்திருந்த இயக்குனர்
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடித்த 'மொத ராத்திரி' படம் வரவேற்பை பெற்றது. இதன் நன்றி அறிவிப்பு விழாவில் பேசிய ராஜா கருப்பசாமி, ''ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் ஹீரோ ரிஷிகாந்தை மாற்ற சொன்னார்கள். ஆனால் இப்போது தமிழ் சினிமாவிற்கு ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார்'' என்றார். ரிஷிகாந்த் பேசுகையில், ''6 ஆண்டுகளாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். சினிமாவில் எல்லா கதவுகளும் மூடப்பட்ட பிறகு, எனக்குக் கிடைத்த மிக முக்கிய வெளிச்சம் இது'' என்றார்.
'இருமுடி' இயக்குனர் படத்தில் தனுஷ்
சிவா நிர்வானா இயக்கத்தில் ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த 'இருமுடி' படம் ரூ.200 கோடி வசூலித்தது. அடுத்த படத்தை தனுஷை வைத்து சிவா நிர்வானா இயக்க உள்ளார். ஏற்கனவே தனுஷிடம் கதை சொல்லி இருந்த அவர், தற்போது மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், தமிழ், தெலுங்கில் உருவாகும் அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஜெய் ஜோடியாக பிரியங்கா மோகன்
'சக்ரா' படத்தை இயக்கிய ஆனந்தன் எம்.எஸ் இயக்கத்தில், ஜெய் நாயகனாக நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெய் ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்களுடன் யோகிபாபு, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 'கேஜிஎப்' இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகிறது. விஜய் படம் ஆண்டனி வர்கீஸ் வருத்தம்
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் ஆண்டனி வர்கீஸ். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''விஜயின் 'மாஸ்டர்' படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் சில படங்களில் ஒப்புக்கொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் போனது. விஜய் சார் இப்போது முதல்வர் ஆகிவிட்டார்; இனிமேல் அவருடன் இணையும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான். வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் இப்போதும் அதிகமாகவே இருக்கிறது'' என்றார்.
