sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை- சினிமா- 11.07

/

மதுரை- சினிமா- 11.07

மதுரை- சினிமா- 11.07

மதுரை- சினிமா- 11.07


ADDED : ஜூலை 11, 2025 05:17 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புது கிளைமாக்ஸ் உடன் ரீ-ரிலீஸாகும் தனுஷ் படம்

தனுஷ் நடித்த முதல் ஹிந்தி படம் 'ராஞ்சனா'. 2013ல் வெளியான இதை ஆனந்த் எல் ராய் இயக்க, சோனம் கபூர் நாயகியாக நடித்தார், ஏ.ஆர்., ரஹ்மான் இசையமைத்தார். காதல் கதையில் உருவான இப்படம் தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் வெளியானது. இதை இப்போது டிஜிட்டல் தரத்தில் மெருகேற்றி, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் புதிய கிளைமாக்ஸ் காட்சியை இணைத்து வரும் ஆக., 1ல் படத்தை தமிழில் மறுவெளியீடு செய்கின்றனர்.

'ப்ரீடம்' வெளியீட்டில் சிக்கல்

சத்ய சிவா இயக்கத்தில், சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் நடித்துள்ள 'ப்ரீடம்' படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கல், தியேட்டர் பிரச்னையால் வெளியாகவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை இரவு வரை நடந்தது. இன்று படம் வெளியாகலாம் அல்லது தள்ளிப்போகலாம்.

அனிமேஷனில் விஷ்ணுவின் அவதாரங்கள்

கடவுள் விஷ்ணுவின் அவதாரங்களை வைத்து இயக்குநர் அஷ்வின் குமார் கன்னடத்தில் 3டி தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படம் இயக்குகிறார். இதன் முதல் படமாக 'மஹாவதார் நரசிம்மா' ஜூலை 25ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. விஷ்ணுவின் நரசிம்மர் அவதாரத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. தற்போது இதன் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை வைத்து 'மஹாவதார் பரசுராம்', 'மஹாவதார் ரகுநந்தன்', 'மஹாவதார் கோகுலானந்தா', 'மஹாவதார் கல்கி பகுதி 1' மற்றும் 'மஹாவதார் கல்கி பகுதி 2' ஆகிய படங்களை 2027, 2030, 2033, 2035, 2037 ஆண்டுகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

பணம் கொடுத்து விமர்சனம் பிரேம்குமார் குற்றச்சாட்டு

'96, மெய்யழகன்' படங்களை இயக்கி பாராட்டு பெற்றவர் பிரேம்குமார். இவர் ஒரு நிகழ்வில் பேசும்போது, “தமிழ் சினிமாவில் தற்போது 'நெகட்டிவ் விமர்சனங்கள்' வருவது பிரச்னையாக உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகமாகிறது. இன்றைய விமர்சகர்களின் டார்கெட் வேறாக உள்ளது. எல்லோரையும் அப்படி சொல்ல வில்லை. சிலர் பேசும் விதம், வார்த்தைகள் நெகட்டிவ்வாக உள்ளது. இப்போது பணம் கொடுத்து விமர்சனம் செய்வது 90 சதவீதம் ஆகிவிட்டது. நேர்மையாக விமர்சனம் செய்பவர்கள் குறைவு தான். விமர்சனத்தை வைத்து தான் ரசிகர்களும் படத்திற்கு போவது பற்றி முடிவு செய்கிறார்கள். இது மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இதை திரையுலகினர்கள் சரி செய்ய வேண்டும்'' என்றார்.

அக். 31ல் ஒரே பாகமாக வெளியாகும் 'பாகுபலி : தி எபிக்'

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிப்பில் 2015ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பாகுபலி. இதன் இரண்டாம் பாகம் 2017ல் வெளியாகி ரூ.1800 கோடி வசூலித்தது. இந்த இரு படங்களையும் இணைத்து ஒரு படமாக வெளியிட போவதாக ஏற்கனவே செய்தி வந்தது. இந்நிலையில் பாகுபலி முதல்பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பாகுபலி படத்தின் இரு பாகங்களையும் இணைத்து 'பாகுபலி : தி எபிக்' என்ற பெயரில் அக்., 31ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி கிளைமாக்ஸ்

'ஒரு நொடி' படத்திற்கு பின் மீண்டும் மணிவர்மன் இயக்கத்தில் தமன், ரக் ஷா நடித்துள்ள படம் ஹாரர், திரில்லர் படம் 'ஜென்ம நட்சத்திரம்'. தமன் கூறுகையில், ''ஜென்ம நட்சத்திரம் படம் ஹாலிவுட் படமான 'ஓமன்' போன்று மிரட்டலாக இருக்கும். படத்தின் கிளைமாக்ஸ் அதிர்ச்சியாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும். பல சவாலான அனுபவங்கள் இதில் எங்களுக்கு கிடைத்தது. ஜூலை 18ல் படம் ரிலீஸாகிறது'' என்றார்.






      Dinamalar
      Follow us