தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- சினிமா- 12.09

 மதுரை- சினிமா- 12.09

 மதுரை- சினிமா- 12.09


ADDED : செப் 12, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டொரோன்டோ விழாவில் 'டோரதி' குழு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடித்துள்ள படம் 'டோரதி'. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'கல்யாண விருந்து, முத்துமணி' பாடல்கள் வரவேற்பை பெற்றன. செப்., 25ல் படம் வெளியாகும் சூழலில் கனடா, டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதற்காக சனந்த், ரிஷி, கார்த்திக் சுப்பராஜ் அங்கு சென்றுள்ளனர்.

ஆஸ்கர் விருதே தரலாம்: ஆர்த்தி

நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி உள்ளார். இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்த நிலையில் கோர்ட் உத்தரவால் விமர்சிப்பதை நிறுத்தினர். அதேசமயம் மீண்டும் பாடகி கெனிஷா உடன் வலம் வருகிறார் ரவி. இந்நிலையில் ஆர்த்தி வெளியிட்ட பதிவில் “சூர்யா, அஜித், விக்ரம், கமல், இவங்க எல்லாரையும் விட என் வாழ்க்கைல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. அதற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராம் பொதினேனி படத்தில் சம்யுக்தா

தெலுங்கு நடிகரான ராம் பொதினேனி தமிழில் 'தி வாரியர்' படத்தில் நடித்தார். இப்போது இவர் இயக்குனராக களமிறங்குகிறார். தனது முதல் இயக்கத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிப்பதாக அறிவித்துள்ளனர். சைக்கலாஜிக்கல் திரில்லராக ஆக் ஷன் கதைக்களத்தில் படம் உருவாகிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தமிழிலும் வெளியிடும் விதமாக இப்படம் உருவாகிறது.

மீனவனாக நடித்தது பாக்கியம்: சூரி நெகிழ்ச்சி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார் நடித்த 'மண்டாடி' படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் ரூ.8 கோடி வசூலித்துள்ளது. சூரி கூறுகையில், ''இந்த படம் வெற்றி பெறும் என்ற உறுதியோடு தான் கடலில் பல மாதங்கள் கிடந்து, கஷ்டப்பட்டோம். அதற்கான பலன் கிடைத்துள்ளது. படத்தின் வெற்றியை மீனவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். மீனவனாக நடித்தது என் பாக்கியம்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

'ஸ்ரீ ஸ்ரீ 'ரிலீஸ் எப்போது

ரவி நெலகுடிதி இயக்கத்தில் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் 'ஸ்ரீ ஸ்ரீ'. தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியிட உள்ளனர். காதல் கதையில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மற்ற பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. ஜி.வி., பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை டிச. 4ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

என் வாழ்வை மாற்றிய களரி : ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா ரெட்டி தற்போது 'மகாகாளி' என்ற படத்தில் நடிக்கிறார். விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்த இவர் 2024 முதல் களரி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் கூறுகையில், ''களரி வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. என் வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. இந்த தற்காப்பு கலையைக் கற்றுக்கொண்டது என் வாழ்க்கையின் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. நான் எடுத்த மிகச் சிறந்த முடிவும் இதுதான்'' என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us