ADDED : செப் 18, 2026 12:56 AM
'டான்' இயக்குனர் மீதான புகாரில் சுமுக முடிவு
'டான்' இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, தெலுங்கில் நானி நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். அதற்குள் ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், நானி பட பணிகளை விட்டுவிட்டு இங்கு வந்தார். இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நானி படத் தரப்பு புகார் அளித்தது. அதில் தற்போது பேச்சுவார்த்தை முடிந்து சுமுக முடிவு எடுக்கப் பட்டுள்ளதாம். இதற்கிடையே ரஜினி பட வாய்ப்பும் சிபிக்கு பறிபோனது.
----------அனிருத் வாழ்க்கை மாறப்போகுது: கமல் ஆருடம்
மறைந்த கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பை நடிகர் கமல் 'கிளாப்' அடித்து துவக்கி வைத்தார். கமல் பேசுகையில், ''எப்படி பாலசந்தர் சாருக்குத் திடீர்னு 'அரங்கேற்றம்'ல இருந்து வாழ்க்கையில ஒரு திருப்பம் வந்ததோ, கே. விஸ்வநாத்க்கு 'சங்கராபரணம்' வாழ்க்கையே மாறிச்சோ, அந்த மாதிரி அனிருத்துடைய மியூசிக், அவர் பயணம் இந்த படத்தில் இருந்து மாறும்'' என்றார்.
இந்தியாவின் எம்.ஜி.ஆர் எஸ்.ஜே. சூர்யா லட்சியம்
இயக்குனராக இருந்து குணச்சித்திர நடிகராக, வில்லனாக மாறியுள்ளவர் எஸ்.ஜே.சூர்யா. இதுவரை திருமணம் செய்யவில்லை.
இதுபற்றி அவர் கூறுகையில், ''எனக்கு பெரிய லட்சியம் ஒன்று இருக்கிறது. அதை நோக்கி ஓடுவதால் திருமண எண்ணமே ஏற்படவில்லை. இந்தியாவின் எம்.ஜி.ஆர். ஆவதுதான் அந்த லட்சியம். அது நடக்குமா நடக்காதா என தெரியாது. ஆனால் என் பயணம் அதை நோக்கிதான்'' என்றார்.
