தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- சினிமா- 21.09

 மதுரை- சினிமா- 21.09

 மதுரை- சினிமா- 21.09


ADDED : செப் 21, 2026 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'சிக்மா' டிரைலரை புகழ்ந்த ராஜமவுலி

முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'சிக்மா'. சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் டிரைலரை இயக்குனர் ராஜமவுலிக்கு படக்குழுவினர் திரையிட்டு காண்பித்தனர். டிரைலரை பார்த்தபிறகு ராஜமவுலி கூறுகையில், ''படம் ஜாலியான பயணமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஏராளமான பொழுதுபோக்கு, நிறைய சாகசங்கள், ஜென்ஸி தலைமுறைக்கான ஆக் ஷன் காட்சிகள் உள்ளன. அக்.2ல் ரிலீசாகிறது, தவறவிடாதீர்கள்'' எனப் பாராட்டினார்.

தனுஷ் புதிய படத்திற்கு சிக்கல்

நடிகர் தனுஷ் 2024ல் தேனான்டாள் மற்றும் பைவ் ஸ்டார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு படம் நடிக்கவில்லை. தயாரிப்பு தரப்பு அளித்த புகாரின்படி தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் பேச்சு நடத்தியது. அதன்படி தனுஷ் இன்னும் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் 'லப்பர் பந்து' இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் விரைவில் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்கு திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான 'பெப்ஸி' ஒத்துழைப்பு தர மாட்டோம் எனக் கூறியுள்ளது. இதன் காரணமாக தனுஷூக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'ராக்கா' டீசர் எப்போது

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் 'ராக்கா'. அல்லு அர்ஜூன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் டீசர், அட்லி பிறந்தநாளான செப் .,21ல் (இன்று) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் படத்தில் இணைய இருக்கிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

தாய்மை குறித்து ஸ்ருதி உருக்கம்

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''தாய்மையடைவது எனது ஆழமான ஆசை. இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், குழந்தையை தத்தெடுக்கவும் தயாராக இருக்கிறேன். பிசிஓஎஸ் எனப்படும் ஹார்மோன் பிரச்னையால் மாதவிடாய் சமயத்தில் அதிக வலியை உணர்கிறேன். ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்படக் கூடாதா என பலமுறை யோசித்திருக்கிறேன். அவ்வாறு இருந்திருந்தால், பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறையை வேலை ஒப்பந்தத்திலேயே சேர்த்திருப்பார்கள்'' என்றார்.

சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்

மறைந்த நடிகர் சிவாஜி - கமலா தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி 72, நேற்று சென்னையில் காலமானார். 10 நாட்களாக உடல்நிலை பிரச்னையால் மருத்துவமனையில் இருந்த அவர் இறந்தார். அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின், திரையுலகினர் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us