தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- சினிமா- 24.09

 மதுரை- சினிமா- 24.09

 மதுரை- சினிமா- 24.09


ADDED : செப் 24, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'அன்பில் அவன்' தள்ளிவைப்பு

கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' படம் நாளை (செப்., 25ல்) ரிலீஸாக இருந்த நிலையில் அக்., 2க்கு தள்ளி வைத்துள்ளனர். ''பெரிய அளவிலான வெளியீட்டுடன் உங்களை வந்தடைய இந்த ஒருவாரம் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் அவசியமானதே'' என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸாவதால் இந்த படத்திற்கு குறைந்த தியேட்டர் கிடைத்ததால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கமல் சொன்ன வார்த்தை சூரி நெகிழ்ச்சி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுகாஸ் நடித்த 'மண்டாடி' படம் வெளியாகி ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. ரஜினியை தொடர்ந்து கமலும் இந்த படத்தை பாராட்டி உள்ளார். படக்குழுவினர் அவரை சந்தித்த நிலையில் அதுபற்றி சூரி வெளியிட்ட பதிவில் ''கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்கு கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கையும், புதிய வெளிச்சமும். மண்டாடி குறித்து அவர் பகிர்ந்த பார்வை, வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்'' என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் தேசிய விருது கீர்த்தி சுரேஷ் பதில்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடித்துள்ள டோரதி படம் நாளை ரிலீஸாகிறது. கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ''மதுரை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். மீனாட்சி அம்மன் கோயில், மதுரை சாப்பாடு தவிர அங்குள்ள ஜிகர்தண்டாவும் பிடிக்கும். நான் இளையராஜாவின் இசைக்கு பெரிய ரசிகை, அவர் இசையமைத்து அவர் பாடலுக்கு நாங்கள் ஆடியது பெருமைக்குரியது. மீண்டும் உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமா என கேட்கிறார்கள். இந்த முறை ரிஷி, சனந்த் பெறட்டும். இந்தியா மட்டுமல்ல உலகளவிலும் டோரதி திரைப்படம் பேசப்படும்'' என்றார்.

அக்.16ல் 'அப்பா குட்டி' ரிலீஸ்

மு மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள படம் 'அப்பா குட்டி'. தந்தை, மகளுக்கு இடையேயான அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அக்., 16 ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

'சிறை' ஹீரோவின் 3வது படம்

'சிறை' படத்தில் அறிமுகமான தயாரிப்பாளர் லலித் மகன் எல்கே அக் ஷய் குமார் தற்போது ராவடி படத்தில் நடித்துள்ளார். இவரின் 3வது படம் துவங்கி உள்ளது. விஷ்ணு அமரன் என்ற புதுமுகம் இயக்க முக்கிய வேடத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் நடிக்கின்றனர். ஹேஷம் அப்துல் வஹாப் இசை. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இதன் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், கோல்கட்டாவில் நடைபெற உள்ளது.

வெற்றிகளை விட அன்பு பெரியது:- சிரஞ்சீவி நெகிழ்ச்சி

1978ல் பிராணம் கரீது என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகர் சிரஞ்சீவி சினிமாவிற்கு வந்து 48 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுபற்றி அவர் கூறுகையில், ''இந்த 48 ஆண்டுகளில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். பல வெற்றிகளை பார்த்திருக்கிறேன். விருதுகள் பல வாங்கி உள்ளேன். இந்த வெற்றிகளை விட நீங்கள் என் மீது காட்டும் அன்புதான் பெரியது. உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு, என் மீது அளவில்லாத அன்பைப்பொழியும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்'' என்றார்.

துணிந்து செய்தேன்:- ராஷ்மிகா

பழங்குடியின பெண்ணாக நடிகை ராஷ்மிகா ஆக் ஷனில் களமிறங்கி உள்ள படம் 'மைசா'. இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. ராஷ்மிகா கூறுகையில், ''படத்தில் ஒரு காட்சிக்காக 90 அடி உயரமுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து குதிக்கணும். நான் பயந்துவிட்டேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் கடினமாக இருந்தது. இருப்பினும் அந்தக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக துணிந்து செய்தேன்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us