தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- சினிமா- 28.09

 மதுரை- சினிமா- 28.09

 மதுரை- சினிமா- 28.09


ADDED : செப் 28, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 12:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலம் பதில் சொல்லும் 'லெஜெண்ட்' சரவணன்

சினிமாவிலும் நடித்து வரும் தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் சென்னை கல்லுாரி விழாவில் பேசுகையில், ''என் 3வது படத்தில் மூன்று கேரக்டரில் நடிக்க உள்ளேன். அது விஜய் படம் மாதிரி இருக்கும். விரைவில் அறிவிப்பு வெளியாகும். இப்போதைக்கு அரசியல் கட்சி துவங்கும் எண்ணமில்லை. அடுத்த தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு காலம்தான் பதில் சொல்லும்'' என்றார்.

நடிகர் சங்க கட்டடம் டிசம்பருக்குள் திறப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மூத்த நடிகை லதாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சங்க தலைவர் நாசர், ''நம்மில் ஒருவராக இருந்து முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். நடிகர் சங்க புது கட்டடதை டிசம்பர் முதல் வாரத்திற்குள் முதல்வர் விஜய் திறந்து வைப்பார்'' என்றார்.

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

மறைந்த நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இதில் எம்.ஜி.ஆர்., ஆக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே 'தேசிய தலைவர்' படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர். தற்போது இப்படத்திற்கு 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்' என தலைப்பு வைத்துள்ளனர். எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவக்கிய அக்.,17 ல் இப்படம் துவங்குகிறது.

''நல்ல விஷயங்களுக்கு காலம் தேவை''

பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'லவ்' வெப் தொடர் அக்.2ல் ரிலீசாகிறது. இதுபற்றி பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ''காதல் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 'லவ்' சிறந்த வாய்ப்பாக அமைந்தது. அர்ஜூன் தாஸூடன் ஒரு படத்தில் நடிக்க இருந்தது, முடியாமல் போனது.தற்போது லவ் மூலம் நடந்து விட்டது. நல்ல விஷயங்கள் நடக்க சில நேரங்களில் காலம் தேவைப்படும்'' என்றார்.

'தி பாரடைஸ்' ரூ.136 கோடி வசூல்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், மோகன் பாபு நடித்த 'தி பாரடைஸ்' படம் தெலுங்கில் உருவாகி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசானது. படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், வசூல் குறையவில்லை. 3 நாளில் இப்படம் ரூ.136 கோடி வசூலித்துள்ளது.

இந்தியாவின் அதிக பணக்கார நடிகர்கள்

இந்திய நடிகர்களில் சொத்து விபரம், தொழில் முதலீடுகள், இதர வருவாய் உள்ளிட்ட விபரங்களை வைத்து பணக்காரர்களின் பட்டியல் 'எம்3எம் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2026' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. அதன்படி ஹிந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.10 ஆயிரம் கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறார். நாகார்ஜூனா (5 ஆயிரம் கோடி), அமிதாப் பச்சன் (4 ஆயிரம் கோடி) 2வது, 3வது இடத்தில் உள்ளனர். தமிழ் நடிகர்கள் யாரும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us