ADDED : பிப் 02, 2026 06:59 AM
வேள்பாரி கதையில் ரஜினி நடிக்கிறாரா
'வேள்பாரி' நாவலை சினிமாவாக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறார் இயக்குனர் ஷங்கர். பட்ஜெட், நடிகர்களின் கால்ஷீட் காரணமாக தள்ளிப்போனது. தற்போது நடிகர்கள் விக்ரம், ரன்வீர் சிங்கை வைத்து படத்தை இயக்க உள்ளாராம் ஷங்கர். மும்பை நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியை ஒரு கவுரவ வேடத்தில் அல்லது முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க ஆசைப்படும் ஷங்கர், அதற்காக ரஜினியை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார். அவர் 'ஓகே' சொன்னால் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
94வது வயதில் 61வது படம் இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்
'பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், லிட்டில் ஜான், ராஜ பார்வை, மைக்கேல் மதன காமராஜன்' போன்ற படங்களை இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். தற்போது 94 வயதை எட்டியுள்ள அவர், தனது 61வது படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விரைவில் பட தலைப்பை அறிவிக்கின்றனர்.
'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் கவுதம் மேனன் நம்பிக்கை
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்த 'துருவ நட்சத்திரம்' படம் 2017ல் முடிந்து இன்னும் வெளியாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன இப்படம் பற்றி கவுதம் மேனன் கூறுகையில், ''பைனான்ஸ் பிரச்னையை சரிசெய்ய இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இறுதிகட்ட பிரச்னைகளை சரிசெய்து வருகிறேன். இன்னும் இரு வாரங்களில் பட ரிலீஸ் தேதியை அறிவிப்போம் என நம்புகிறேன். இதன் ரிலீசுக்காக புதிய படங்களை இயக்காமல் இருக்கிறேன்'' என்றார்.
