தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- சினிமா- 06.03

 மதுரை- சினிமா- 06.03

 மதுரை- சினிமா- 06.03


ADDED : மார் 06, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருவாரம் முன்பே ரிலீசாகும் பவன் கல்யாண் படம்

ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 'உஸ்தாத் பகத்சிங்' படம் மார்ச் 26ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் மார்ச் 19ல் ரிலீசாக திட்டமிட்டிருந்த யஷ்-ன் 'டாக்சிக்' படம் தள்ளிவைக்கப்பட்டதால் உஸ்தாத் பகத்சிங் படத்தை ஒரு வாரம் முன்பே 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணிக்கு தமன் இசையமைக்கின்றனர். ஸ்ரீலீலா, ராஷி கண்ணா நாயகிகளாக நடித்துள்ளனர்.

நல்ல கதை கிடைத்தால் தமிழில் நடிக்க ரெடி: பாவனா

மலையாளத்தில் பாவனா நடித்த 'அனோமி' படம், கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தமிழில் டப்பிங் செய்து இன்று வெளியாகிறது. பாவனா கூறுகையில், ''இது கதைக்கு முக்கியத்துவமுள்ள படம். இது மாதிரியான படங்களில் நடிக்க விருப்பம். தமிழை புறக்கணிக்கவில்லை; நல்ல கதை கிடைத்தால் நடிக்க ரெடி. அதற்காக 6 மாதங்கள் கூட காத்திருப்பேன்'' என்றார்.

அஜித் அண்ணன் நடிகரானார்

நடிகர் அஜித், சினிமா மற்றும் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அஜித்தை தவிர அவரது குடும்பத்தினர் சினிமா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கியே இருக்கின்றனர். இந்த நிலையில், திருமண தகவல் மையத்தை நடத்திவரும் அஜித் அண்ணன் அனில்குமார், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுபற்றி அனில்குமார், 'கோகோ அண்ட் நட்' என்ற ரொமான்டிக், காமெடி படத்தில் நிஜ வாழ்க்கையை போல் திருமண புரோக்கராக நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கலாசாரம் என் அடையாளம்: ஜான்வி கபூர்

ஹிந்தி படங்களில் நடித்து வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தெலுங்கில் தற்போது ராம்சரணுடன் 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி கூறுகையில், ''ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் கலாசாரத்துடன் நான் மிகவும் இணைந்திருப்பதாக உணர்கிறேன். இக்கலாசாரம் எனக்கு பரிட்சயமானது, என் அடையாளத்தின் ஒரு பகுதி. தமிழில் ஓரளவு பேசத் தெரியும். தெலுங்கு பேச பயிற்சி எடுத்து வருகிறேன்'' என்றார்.

மார்ச் 27ல் 'ஹாப்பி ராஜ்' ரிலீஸ்

பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கவுரி ப்ரியா, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'ஹாப்பி ராஜ்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப் படம் மார்ச் 27ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

'சிக்ஸ் பேக்' வேண்டாம் நடிகர் பரத் அறிவுரை

நடிகர் பரத் நடித்த பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. அவர் நடித்த 'ஐந்து ஐந்து ஐந்து' படத்தில் உடலை மெருகேற்றி சிக்ஸ் பேக் வைத்திப்பார். அதற்காக பட்ட சிரமங்களை பகிர்ந்துள்ள பரத், ''சிக்ஸ் பேக் என்பது விபரீதமான முயற்சி. இதனை தயவு செய்து யாரும் முயற்சி செய்ய வேண்டாம். உடல் உறுப்புகள் கடுமையாக பாதிப்படையும். அதற்கு பதிலாக உடலை நார்மலாக கட்டுகோப்புடன் வைத்துக்கொள்ளுங்கள்'' என அறிவுரை கூறியுள்ளார்.

சிங்கம் புலியை பாராட்டிய கமல்

சிவகுமார் முருகேசன் இ யக்கத்தில் ராதிகா நடித்த 'தாய்கிழவி' படம் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் நடிகர் கமலின் ரசிகராக நடித்த சிங்கம் புலியின் நடிப்பை பலரும் பாராட்டினர். பட விழாவில் பேசிய அவர், ''இதுவரை கமலை பார்த்ததில்லை, ரஜினி ரசிகராக இருந்தாலும் படத்தில் கமல் ரசிகராக நான் நடித்திருந்ததை பார்த்த பிறகு கமல் பாராட்டுவார் ''என நம்புவதாக கூறியிருந்தார். அதன்படியே படத்தை பார்த்த கமல், சிங்கம்புலியை நேரடியாக அழைத்து பாராட்டியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us