ADDED : மார் 30, 2026 05:11 AM
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமீபத்தில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'உஸ்தாத் பகத்சிங்' படத்தில் நடித்தார். இந்த பட நிகழ்வில் தனது ஜாதி குறித்து பேசியது சர்ச்சையானது. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டார். இப்போது பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில், ''மனதளவில் நான் ஜாதியில்லை, மதமில்லை என்று உறுதியாய் இருப்பவன். இடையில் அதற்கொரு சோதனை ஏற்பட்டதால் ஜாதி, மதம் இல்லாத அரசின் சான்றிதழை பெற முயற்சி எடுத்துள்ளேன். விரைவில் எனக்கொரு சான்றிதழ் கிடைக்கும்'' என தெரிவித்துள்ளார்.
நம்புங்க ஏப்.10ல் 'எல்ஐகே' ரிலீஸ்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'(எல்ஐகே). இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப் போனது. இப்போது ஏப்., 10ல் ரிலீஸ் என வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் விக்னேஷ் சிவன், பிரதீப், அனிருத் ஆகியோர் ரிலீஸ் தேதி பற்றி தங்களை தாங்களே கலாய்த்துள்ளனர். இந்தமுறை கண்டிப்பாக படம் வந்துவிடும் என்று நம்புவோம்.
