மதுரை : ரிசர்வ்லைன் விளையாட்டு குழுமம் சார்பில் மாநில அணிகளுக்கான ஹாக்கிப் போட்டிகள் மதுரை ரிசர்வ் லைன் மைதானத்தில் நடக்கின்றன.
போட்டி முடிவுகள்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 6 - 0 என்ற கோல் கணக்கில், திருநகர் ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செந்தில்குமார் சிறந்த வீரர் பட்டம் வென்றார். சென்னை உணவு கார்ப்பரேஷன் கழக அணி டைபிரேக்கர் முறையில் 4 - 3 என்ற கோல் கணக்கில், சென்னை ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவை வீழ்த்தியது. உணவு கார்ப்பரேஷன் அணியின் பரணிராஜா சிறந்த வீரர் பட்டம் வென்றார்.
சென்னை சென்ட்ரல் எக்சைஸ் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் மதுரை ரிசர்வ் லைன் அணியை வீழ்த்தியது. ரிசர்வ் லைன் அணியின் அரவிந்த் சிறந்த வீரர் பட்டம் வென்றார். சென்னை இந்தியன் வங்கி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியை வீழ்த்தியது. போலீஸ் அணியின் டேவிட் ஆரோக்கியராஜ் சிறந்த வீரர் பட்டம் வென்றார். இன்று நடக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, உணவு கார்ப்பரேஷன், சென்ட்ரல் எக்சைஸ், இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.