/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ல் கட்டி முடிக்கப்படும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கடிதம்

ADDED : நவ 10, 2024 04:15 AM
திருப்பரங்குன்றம் : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027ல் கட்டி முடிக்கப்படும் என அதன் நிர்வாக இயக்குனர் அனுமந்த் ராவ் தனக்கு கடிதம் மூலம் பதில் அளித்துள்ளதாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரையில் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின்பு எந்த ரோடும் சீரமைக்கப்படவில்லை. மாவட்டத்தில் 900 கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் எந்த கண்மாயிலும் விவசாயிகள் மண் அள்ளுவதாக தெரியவில்லை. விவசாயிகள் போர்வையில் கனிம வள திருட்டு நடக்கிறது. இதை கண்டித்து திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்டட பணிகள் 2025 டிசம்பருக்குள் முடிக்கப்படும். 2027ல் கட்டடப் பணிகள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என நிர்வாக இயக்குனர் அனுமந்த ராவ் எனக்கு கடிதம் மூலம் பதில் தெரிவித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில் மூன்று ஆண்டுகளாக இருந்த கட்சிகள் தற்போது தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்த துவங்கி உள்ளனர். கூட்டணியில் இருந்து பிரிய தயாராகி விட்டார்கள். எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத முதல்வர், மதுரையில் கள ஆய்வு செய்ய வருவது வேடிக்கைக்கு உரியது என்றார்.