/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கலைக்குழு காசியில் பங்கேற்பு
/
மதுரை கலைக்குழு காசியில் பங்கேற்பு
ADDED : பிப் 17, 2025 05:51 AM

மதுரை : உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில்இந்தாண்டுக்கான 'காசிதமிழ்ச் சங்கமம் 3.0' பிப். 15 முதல் 24 வரை நடக்கிறது. இதன் துவக்க விழாவில் பங்கேற்ற மதுரை துவரிமானைச் சேர்ந்த கலைத்தாய் கிராமிய பல்சுவை கலைக் குழுவினர், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
குழுத் தலைவர் நாகேஸ்வரன் கூறுகையில், ''ஆறு வயது முதல் இக்கலையில் இருக்கிறேன். நமது பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை மீட்கும் விதமாக குழு அமைத்து கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். திருவிழாக்கள், அரசு நிகழ்ச்சிகளில் ஒயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டத்தில் எங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறோம். தற்போது காசி தமிழ்ச் சங்கமத்தில்நமது கலாச்சாரத்தை பரப்பவாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி'' என்றார்.

