/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரம் விறுவிறு: தெருத்தெருவாக மக்களை தேடிச்சென்றனர்
/
மதுரை வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரம் விறுவிறு: தெருத்தெருவாக மக்களை தேடிச்சென்றனர்
மதுரை வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரம் விறுவிறு: தெருத்தெருவாக மக்களை தேடிச்சென்றனர்
மதுரை வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரம் விறுவிறு: தெருத்தெருவாக மக்களை தேடிச்சென்றனர்
ADDED : ஏப் 18, 2024 05:28 AM

மதுரை: மதுரையில் அ.தி.மு.க., மா.கம்யூ., பா.ஜ., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் விறுவிறு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் காலை பெத்தானியாபுரத்தில் பிரசாரம் துவக்கினார். 'வெற்றி மீது வெற்றி தான் எங்க கையில' என்ற விஜயகாந்த் பாட்டிற்கு ஏற்ப உடலை அசைத்து ஆடியபடி ஓட்டு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாலை நரிமேடு, செல்லுார், மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு தெருவாக சென்று இறுதிகட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.
பா.ஜ., வேட்பாளர் ராம சீனிவாசன் காலை பீபிகுளம் பகுதியில் துவங்கி ஊர்வலமாக சென்றனர். மாலை டி.ஆர்.ஓ., காலனி முதல் ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு மேலமாசி வீதி வடக்குமாசி வீதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். நகர் தலைவர் மகாசுசீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் காலையில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். மாலை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் முன் கூட்டணி கட்சிகளுடன் இறுதிகட்ட பிரசாரம் செய்தார். அமைச்சர் தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், இளைஞரணி அமைப்பாளர் சவுந்தர், காங்., நகர் தலைவர் கார்த்திகேயன் உட்பட உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்தியாதேவி காலை தெப்பக்குளம், அனுப்பானடி, டி.வி.எஸ்., நகர், விளாங்குடி, கூடல்புதுார், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மாலை அரசரடி பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். மண்டல பொறுப்பாளர்கள் அப்பாஸ், ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி
தேனி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனுார், உத்தப்பநாயக்கனுார், செல்லம்பட்டி, விக்கிரமங்கலம், வாலாந்துார் பகுதிகளில் பிரசாரம் செய்தவர், உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் நிறைவு செய்தார்.
பேரையூர்
விருதுநகர் காங்., கட்சி வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு ஆதரவாக தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கூட்டணி கட்சியினர் பேரையூரில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். தேர்தல் பொறுப்பாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் காமாட்சி உடன் சென்றனர். தி.மு.க., நகர் செயலாளர் வருசைமுகமது ஏற்பாடுகளை செய்தார்.
திருப்பரங்குன்றம்
மாணிக்கம் தாகூரை ஆதரித்து தி.மு.க., வினர் திருப்பரங்குன்றத்தில் இறுதி கட்ட பிரசாரம் செய்தனர். தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில், நகராட்சி மண்டல தலைவர் சுவிதா மற்றும் மகளிர் அணியினர் ஓட்டு சேகரித்தனர்.
விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து சைக்கிள் ஊர்வலம் நடந்தது. மண்டல் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் துவக்கி வைத்தார்.
திருமங்கலம்
மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., திருமங்கலம் தெற்கு ஒன்றியம் சார்பில் டூவீலரில் பா.ஜ., வினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். தென் மண்டல பா.பி., தலைவர் திருமாறன், பா.ஜ., மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் தொடங்கி வைத்தனர். மண்டல் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

