sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை நகர் ரோடுகளால் டிரைவர்களுக்கு...' மக்கர் பண்ணுது மனசு' : அரசு பஸ்களுக்கு எப்போது விடியல்

/

மதுரை நகர் ரோடுகளால் டிரைவர்களுக்கு...' மக்கர் பண்ணுது மனசு' : அரசு பஸ்களுக்கு எப்போது விடியல்

மதுரை நகர் ரோடுகளால் டிரைவர்களுக்கு...' மக்கர் பண்ணுது மனசு' : அரசு பஸ்களுக்கு எப்போது விடியல்

மதுரை நகர் ரோடுகளால் டிரைவர்களுக்கு...' மக்கர் பண்ணுது மனசு' : அரசு பஸ்களுக்கு எப்போது விடியல்

1


ADDED : ஜன 03, 2026 05:18 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:18 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் தாழ்தள பஸ்கள் இயக்கப்பட்டாலும் சேதமடைந்த ஆக்கிரமிப்பு ரோடுகளால் டிரைவர்க் மன உளைச்சலில் உள்ளனர்.

மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் 16 டிப்போக்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பல சமீபத்தில் புதிதாக மாற்றப்பட்டன. மாற்றுத்திறனாளிகளும் வசதியாக பயணிக்க தாழ்தள பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அதை இயக்கும் டிரைவர்களோ, நகரின் ரோடுகளால் மனஉளைச்சலுக்கு ஆளாகி புலம்புகின்றனர்.

அவர்கள் கூறியதாவது: நகரின் பிரதான பகுதிகளில்கூட ரோடுகள் மேடு பள்ளமாக உள்ளன. திடீர் பள்ளம், ரோட்டோரம் ஆக்கிரமிப்பு என பஸ்களை பதம் பார்க்கின்றன. காளவாசல், அரசரடி, அண்ணா பஸ்ஸ்டாண்ட் உட்பட பலபகுதிகளில் ரோடு மோசமாக உள்ளன. பலஇடங்களில் பஸ்களின் மீது மரக்கிளைகள் உரசுகின்றன. 160க்கும் மேற்பட்ட, தலா ரூ.ஒரு கோடி மதிப்பிலான வசதியான தாழ்தள பஸ்கள், பெரியார் பஸ்ஸ்டாண்டில் இருந்து மாட்டுத்தாவணி, திருமங்கலம், மேலுார், சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இவை நகருக்குள் இயங்கும்போது சவாலை சந்திக்க வேண்டியுள்ளது.

பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பேவர் பிளாக் ரோடு படுமோசமாக உள்ளது. 'பேட்ச் ஒர்க்' யாருக்கும் ஆர்வமில்லை. இதனால் பஸ் படிக்கட்டுகள், இன்ஜின்கள் பாதிக்கப்படுகின்றன. உதிரி பாகங்கள் உட்பட பெரிய செலவினங்களுக்கு உடனடியாக நிதி கிடைக்காது என்பதால் பார்த்துப்பார்த்து ஓட்ட வேண்டியுள்ளது.

கலெக்டர் தலைமையில் சாலைப்பாதுகாப்பு கூட்டம் நடத்தியும் தீர்வில்லை. மகளிர் விடியல் பஸ்கள் பல அதர பழசாக உள்ளன. புதிதாக 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வர உள்ளதாக கூறுகின்றனர். அதற்குள் எங்களது சிரமத்தை போக்கி பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு அரசு உதவ வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us