ADDED : நவ 25, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
மதுரை: போத்தனுார் – மதுக்கரை இடையே உயர்மின்னழுத்த மேல்நிலை மின்பாதை அகற்றும் பணி காரணமாக மதுரை – கோவை ரயில் (16722) இன்று (நவ.26) பொள்ளாச்சி வரை மட்டும் இயக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
தற்போது அப்பணி டிச.10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரயில் (16722) இன்று வழக்கம் போல் கோவை வரை இயக்கப்படுவதாகவும், டிச.10ல் பொள்ளாச்சி – கோவை இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
