/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி தி.மு.க., மண்டல தலைவர் மற்றொரு வழக்கில் கைது
/
மாநகராட்சி தி.மு.க., மண்டல தலைவர் மற்றொரு வழக்கில் கைது
மாநகராட்சி தி.மு.க., மண்டல தலைவர் மற்றொரு வழக்கில் கைது
மாநகராட்சி தி.மு.க., மண்டல தலைவர் மற்றொரு வழக்கில் கைது
ADDED : ஆக 18, 2011 04:22 AM
மதுரை : மதுரைதெற்குவாசலை சேர்ந்தவர் ஹக்கீம்தீன், 36.
புதூரில் நான்கு இடங்களில் வாடகைக்கு கடை எடுத்து மீன் வியாபாரம் செய்கிறார். கடைகளுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் மாமூல் கேட்டு, மிரட்டி, கொலை செய்ய முயற்சித்த வழக்கில் நேற்று முன் தினம் இசக்கிமுத்து கைது செய்யப்பட்டார்.
நேற்று மற்றொரு வழக்கில் தல்லாகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இசக்கிமுத்துவின் தங்கை தங்கம். இவர் வங்கி கடன் பெற்று வாங்கிய இண்டிகா காரை, புதூரை சேர்ந்த 108 இலவச ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணக்குமார் ரூ.1.65 லட்சத்திற்கு விலை பேசி ரூ.60 ஆயிரத்தை இசக்கிமுத்துவிடம் கொடுத்தார். பாக்கி ஒரு லட்சத்து 5000 ரூபாயை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் செலுத்தும்படி இசக்கிமுத்து கூறினார்.
வங்கியில் விசாரித்த போது காருக்கு ரூ.1.45 லட்சம் பாக்கி உள்ளதாக கூறினர். இதுகுறித்து @கட்ட சரவணக்குமாரின் நண்பர் இருளாண்டியை இசக்கிமுத்து, மகன் குட்டிமணி, உதவியாளர்கள் ரவி, வேல்முருகன் தாக்கமுயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை நேற்று கைது செய்தனர்.
ஜாமின் மனு தள்ளுபடி: ஹக்கீம்தீனை கொல்ல முயன்ற வழக்கில் ஜாமின் கோரி நான்காவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இசக்கிமுத்து மனு செய்தார். இதை மாஜிஸ்திரேட் டி.சுஜாதா (பொறுப்பு) தள்ளுபடி செய்தார்.