/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ரூ. 10 லட்சம் மோசடி: பெண் கைது
/
மதுரையில் ரூ. 10 லட்சம் மோசடி: பெண் கைது
ADDED : செப் 01, 2011 11:43 PM
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ரூ.
10 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செம்பொன்நெறிஞ்சியை சேர்ந்த தங்கவேலு மனைவி மலையரசி(43). இவர் செம்பொன் மக்கள் சேவை மையம் நிறுவனம் நடத்தினார். அவனியாபுரம் மற்றும் பல பகுதிகளில் பெண்களிடம், ரூ. 650 கட்டினால், தொழில் துவங்க ரூ. 30 ஆயிரம், ரூ. 5 ஆயிரத்து 550 கட்டினால், ரூ. ஒரு லட்சம், கடன் தருவதாக கூறினார். அவனியாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜாத்தி, மற்றொரு ராஜேஸ்வரி ஆகியோர் மூலம் ரூ. 19 லட்சத்து 26 ஆயிரம் வரை மக்களிடம் வசூலித்தார். பணம் கட்டி பல மாதங்களாகியும் கடன் கிடைக்காததால், பணம் கட்டியவர்கள் திருப்பி கேட்டனர். பணம் வாங்கி கொடுத்த மூவரும், மலையரசியிடம் கேட்டதால், ரூ. 9 லட்சத்தை திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 10 லட்சத்து 26 ஆயிரத்தை திருப்பி தரவில்லை. மலையரசி மீது எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் புகார் செய்யப்பட்டது. எஸ்.பி., உத்தரவின்படி அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலையரசியை நேற்று கைது செய்தனர்.