ADDED : செப் 01, 2011 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுமலை : மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி அருகே ஆடு மேய்த்த தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் பால்ச்சாமி (60). மல்லப்புரத்தை சேர்ந்தவர் ஊர்காலன் (40). இருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு இருந்து வந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஊர் காலன் அரிவாளால் பால்ச்சாமியை வெட்டியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதை தடுத்த அவர் மனைவி சரஸுக்கும் வெட்டு விழுந்தது. ஊர்காலன் எம்.கல்லுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.