ADDED : ஏப் 18, 2026 06:33 PM
கோயில் * சித்திரைத் திருவிழா- கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:30 முதல் 11:30 மணிக்குள், அம்மன், சுவாமி கற்பக விருட்சம் - சிம்ம வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
பக்தி சொற்பொழிவு * சங்கர ஜெயந்தி முன்னிட்டு சாம வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:00 மணி முதல், ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, சவுந்தர்யலஹரி ஸ்தோத்திரங்கள் பாராயணம், மாலை 5:00 முதல் 6:00 மணி வரை.
* சீதா கல்யாணம்: நிகழ்த்துவோர் -- ராதாகிருஷ்ணன் பஜன் மண்டலி, நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 9:00 மணி முதல்.
* லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் -- சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:00 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* 'மாணிக்கத்துள்ளே மரகதமாய்' திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது * மதுரை மாவட்ட நீதிமன்ற புதிய கட்டடங்கள் திறப்பு விழா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விருந்தினர் மாளிகை கூடுதல் கட்டடம் திறப்பு விழா: மாவட்ட நீதிமன்ற வளாகம், மதுரை, துவக்கி வைப்பவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், முன்னிலை: உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, காலை 10:30 மணி.
* ஆலவாய் சொக்கநாதர் மடம் திறப்பு விழா: 31 ஏ, தளவாய் தெரு அக்ரஹாரம், மதுரை, திருமுறை விண்ணப்பம், காலை 10:00 மணி, திருநீற்றின் பெருமை சிறப்புரை: மாரியப்பன், அன்னதானம், மதியம் 1:00 மணி.
* மதுரை கிளையின் 29வது ஆண்டு துவக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழா: அரவிந்தர் அன்னை தியான மையம், 12, அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது ஸ்டாப், மதுரை, தலைமை: அரவிந்த் கண் மருத்துவமனை கல்வி இயக்குநர் வெங்கடேஷ் பிரஜ்னா, மலர் போல மலர்கின்ற மனம் சிறப்புரை: பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், காலை 10:30 மணி முதல், ஏற்பாடு: அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மதர் மிரா டிரஸ்ட், மலர் பிரசாதம், மதிய உணவு, மதியம் 1:00 மணி.
* குடியிருப்போர் சங்க மாதாந்திர கூட்டம்: பல்லவி நகர் குடியிருப்போர் சங்க அலுவலகம், பல்லவி நகர் 7 வது தெரு, கலை நகர் விரிவாக்கப்பகுதி, மதுரை, தலைமை: பொதுச்செயலாளர் குமரகுருபரன், காலை 11:00 மணி.
மருத்துவம் * உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரைப்பை, குடல், கல்லீரல்,சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரிதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
