ADDED : ஏப் 19, 2026 10:21 PM
கோயில் * சித்திரைத் திருவிழா 2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கொடியேற்றம், தங்கச்சப்பரத்தில் வீதியுலா, காலை 7:00 மணி, பூத -அன்ன வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு * சங்கர ஜெயந்தி முன்னிட்டு சாம வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:00 மணி முதல், ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம், மாலை 5:00 முதல் 6:00 மணி வரை.
* அட்சய திருதியை முன்னிட்டு அகண்ட மஹா மந்திர கீர்த்தனை: நிகழ்த்துவோர் - ராதாகிருஷ்ணன் பஜன் மண்டலி, நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, ஐயர் பங்களா, காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது * 'பெண்பிரினியர்' - பெண் தொழில் முனைவோர் சங்கம் மதுரைக்கிளை தொடக்க விழா: பாப்பிஸ் ஓட்டல், மதுரை, தலைமை விருந்தினர்கள்: தியாகராஜர் மில்ஸ் இயக்குநர் விசாலாட்சி கண்ணன், இந்தியன் ஆயில் நிறுவன கோட்ட சில்லறை விற்பனைத் தலைவர் ராஜபாண்டியன், காலை 10:00 மணி.
விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
