தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி / ஏப்ரல் 21 க்குரியது

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி / ஏப்ரல் 21 க்குரியது

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி / ஏப்ரல் 21 க்குரியது


ADDED : ஏப் 20, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * சித்திரை பெருவிழா - 3ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாசி வீதிகளில் தங்கச்சப்பரம், காலை 7:00 மணி, கைலாசபர்வதம் வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், காமதேனு வாகனத்தில் அம்மன் உலா, இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

பக்தி சொற்பொழிவு * சங்கர ஜெயந்தி: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஆதிசங்கரருக்கு மஹந்யாஸ புரஸ்தர ருத்ர ஏகாதசினி ஜபம், அபிஷேகம், ருத்ர ஹோமம், காலை 8:00 மணி முதல், மஹா தீபாராதனை, மதியம் 12:30 மணி, சங்கரர் அஷ்டோத்திரம் பாராயணம், மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* சத்சங்கம், ஆசிரம பிரார்த்தனை, 'ஜயஜய சங்கரா' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஞானசம்பந்தன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* பெரிய புராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* சங்கர ஜெயந்தி, விவேக சூடாமணி: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யசத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.

* கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி.

* சங்கர ஜெயந்தி: நிகழ்த்துபவர் - சுவாமி அர்க்கபிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

விளையாட்டு * 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us