ADDED : ஏப் 17, 2026 11:22 PM
கோயில் * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு * சங்கர ஜெயந்தி முன்னிட்டு சாம வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 8:00 மணி முதல், ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி, சகல தேவதா ஸ்தோத்திரங்கள் பாராயணம், மாலை 5:00 முதல் 6:00 மணி வரை.
* சத்சங்கம்: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, பக்தி இன்னிசை: நிகழ்த்துபவர் - சுப்புலட்சுமி, இரவு 7:00 மணி.
* லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:00 முதல் 10:15 மணி வரை,
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது * மடீட்சியா ஆண்டு விழா: மடீட்சியா ஹால், மேலுார் ரோடு, மதுரை, தலைமை விருந்தினர்: ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர் கவிதாசன், முன்னிலை: மடீட்சியா தலைவர் செந்திகுமார், மாலை 4:30 மணி முதல்.
* 'புன்னகைப்பூக்கள்' சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி ஆண்டு விழா: காந்தி மியூசியம், தலைமை விருந்தினர்: மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் பிரேமலதா, வழக்கறிஞர் மகேந்திரன், விஷான் கிரியேட்டர்ஸ் பீமராஜ் ஜெகதீசன், காலை 10:00 மணி முதல்.
* மதுரை வாசகர் வட்டம் சிறப்பு கூட்டம்: மதுரை மாநகராட்சி சிறப்பு பூங்கா, தாமரை தண்ணீர் தொட்டி அருகில், கோ.புதுார், சிறப்புரை: கவிஞர் ரவி, முன்னிலை: ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, எழுத்தாளர் சண்முகவேலு, காலை 10:00 மணி.
* மாதாந்திர இசை நிகழ்ச்சி: ஓட்டல் தமிழ்நாடு யூனிட் 3 ( பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல்), அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு - கமலா தீப்தி, வயலின் - ரம்யா, மிருதங்கம் - அக் ஷய் ராம், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.
* அருணாச்சலனார் நினைவு அறக்கட்டளை விழா: திருவள்ளுவர் மன்றம், 9, பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், மதுரை, தலைமை: பொருளாளர் சம்பத், சங்க இலக்கியங்களில் நட்பு சிறப்புரை: வி.கே.கே., உயர்நிலைப் பள்ளி முன்னாள் முதல்வர் வள்ளியம்மாள், மாலை 4:30 மணி முதல்.
* ஹிந்தி பேச்சுப் பயிற்சி சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சி அளிப்பவர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.
பள்ளி, கல்லுாரி * 27 வது ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா: சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: சத்யம் குரூப் ஆப் கம்பெனியஸ் நிறுவனர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள்: மீனாட்சி பேன் ஹவுஸ் நிர்வாக இயக்குநர் சரவணன், சாய் பொறியியல் கம்பெனி நிர்வாக இயக்குநர் சிதம்பரம் ராஜேந்திரன், பூங்குழலி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் வெங்கடேசன், தலைமை: சபைத் தலைவர் பாஸ்கரன், முன்னிலை: முதல்வர் நவநீதகிருஷ்ணன், காலை 10:00 மணி முதல்.
மருத்துவம் * உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரைப்பை, குடல், கல்லீரல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரிதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
* இலவச ரத்தவியல் மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு * 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
