தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை உலக சுற்றுச்சூழல் தினம் :காலை 11 மணிக்கு வாகனங்களை நிறுத்த அழைப்பு

நாளை உலக சுற்றுச்சூழல் தினம் :காலை 11 மணிக்கு வாகனங்களை நிறுத்த அழைப்பு

நாளை உலக சுற்றுச்சூழல் தினம் :காலை 11 மணிக்கு வாகனங்களை நிறுத்த அழைப்பு


ADDED : ஜூன் 04, 2011 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2011 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : ''உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மதுரையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாளை காலை 11 மணிக்கு வாகனங்களை ஒரு நிமிடம் நிறுத்துவோம்'', என கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.

கலெக்டர் செய்திக்குறிப்பு: அதிக வெப்பத்தை கூட்டும் கார்பன் மோனாக்சைடு, மீத்தேன், டயாக்சின் போன்ற வாயுகள் சேர்ந்து வளிமண்டலத்தை தூய்மைக் கேடாக மாற்றி விட்டது.

இதன் விளைவாக, தட்டவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பங்களிப்பாக உள்ளது. இதற்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். சுற்று சூழலுக்கேற்ற பொருளாக வாங்கி உபயோகிக்க வேண்டும். புவியை காப்பது மனிதனின் கையில் தான் உள்ளது.



மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சுற்றுச்சூழலை உறுதிப்படுத்துவதற்காக, தனிநபர் மற்றும் பள்ளி வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகள் நடவேண்டும். வாகன ஓட்டிகள் வாகனங்களை நாளை காலை 11 மணிக்கு ஒரு நிமிடம் நிறுத்த வேண்டும். தூக்கி எறியும் பிளாஸ்டிக்கை தவிர்த்தும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள், நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பும் செயல்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றுவோம், என குறிப்பிட்டுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us