/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி நியமன உத்தரவு வழங்கிய மதுரை தி.மு.க., நிர்வாகி கைது
/
போலி நியமன உத்தரவு வழங்கிய மதுரை தி.மு.க., நிர்வாகி கைது
போலி நியமன உத்தரவு வழங்கிய மதுரை தி.மு.க., நிர்வாகி கைது
போலி நியமன உத்தரவு வழங்கிய மதுரை தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : ஜன 05, 2024 11:00 PM

மதுரை:மதுரையில் கிறிஸ்துவ கல்லுாரிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, போலியாக நியமன உத்தரவுகள் வழங்கி, 56 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக தி.மு.க., பகுதி செயலர் கைது செய்யப்பட்டார்.
மதுரை நகர் தி.மு.க.,வில் புதுார் பகுதி செயலராக கிறிஸ்டி ஜீவகன், 39, என்பவர் உள்ளார். இவர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிறிஸ்துவ நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள பல கல்லுாரிகளில் அலுவலக பணியாளர்கள், உதவி பேராசிரியர்கள் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2019ல் விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டி மோகன் என்பவர் உட்பட ஏழு பேரிடம் தலா, 8 லட்சம் ரூபாய் வீதம், 56 லட்சம் ரூபாய் வாங்கி வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்தார்.
பணம் கொடுத்தவர்களுக்கு கல்லுாரிகளில் வேலைக்கான போலி நியமன உத்தரவுகளை வழங்கி ஏமாற்றினார்.
இது குறித்து, மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மோகன் புகார் அளித்தார். தி.மு.க., பகுதி செயலர் கிறிஸ்டி ஜீவகன் நேற்று கைது செய்யப்பட்டார்.