/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லக்னோ அழகிப்போட்டியில் வென்ற மதுரை பெண் டாக்டர்கள்
/
லக்னோ அழகிப்போட்டியில் வென்ற மதுரை பெண் டாக்டர்கள்
லக்னோ அழகிப்போட்டியில் வென்ற மதுரை பெண் டாக்டர்கள்
லக்னோ அழகிப்போட்டியில் வென்ற மதுரை பெண் டாக்டர்கள்
ADDED : அக் 14, 2024 07:52 AM

திருப்பரங்குன்றம் : உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த கால்நடை பெண் டாக்டர்களுக்கான அழகிப் போட்டியில் மதுரை உதவி டாக்டர்கள் பட்டங்களை வென்றனர்.
இந்தியன் வெட்னரி அசோசியேஷன், சென்னை மற்றும் செய்ப் வெட்மெட் இந்தியா சார்பில் தேசிய பெண் கால்நடை டாக்டர்களுக்கான அழகிப்போட்டி லக்னோவில் நடந்தது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் கால்நடை பெண் டாக்டர்கள் பங்கேற்றனர்.
இதில் மதுரை கால்நடை பராமரிப்புத்துறை தென்பழஞ்சி கால்நடை மருந்தக உதவி டாக்டர் நாகஜோதி, 'திருமதி தமிழ்நாடு', 'திருமதி இன்டலெக்ச்சுவல்' பட்டம் வென்றார்.
கருப்பாயூரணி கால்நடை மருந்தக உதவி டாக்டர் டீனா மோனிஷா, 'திருமதி தென் இந்தியா', 'திருமதி வெடிகோ குயின் ஆப் இந்தியா' பிரிவில் தேசிய அளவில் 2 ம் இடம் பெற்றார்.
அவர்கள் கூறுகையில், 'பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டியில் பங்கேற்றதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள கால்நடை பெண் டாக்டர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இதனால் பலரை தோழிகளாக பெற்றதும் மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.