/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நோயாளிகளை விட கார்கள் அதிகமாவதால் நெருக்கடி மதுரை அரசு மருத்துவமனையில்
/
நோயாளிகளை விட கார்கள் அதிகமாவதால் நெருக்கடி மதுரை அரசு மருத்துவமனையில்
நோயாளிகளை விட கார்கள் அதிகமாவதால் நெருக்கடி மதுரை அரசு மருத்துவமனையில்
நோயாளிகளை விட கார்கள் அதிகமாவதால் நெருக்கடி மதுரை அரசு மருத்துவமனையில்
ADDED : செப் 26, 2024 05:18 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை விட கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வரை அனைத்து வார்டுகளும் பழைய அரசு மருத்துவமனையில் இருந்த போது நோயாளிகளின் டூவீலர்கள் உள்ளே நிறுத்த அனுமதிக்கப்பட்டன.
இடநெருக்கடி ஏற்பட்டதால் டூவீலர்கள் தற்போது மருத்துவமனைக்கு எதிரேயுள்ள கால்வாயை ஒட்டி நிறுத்தப்படுகின்றன. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் தீவிர விபத்து சிகிச்சை பிரிவு வளாகங்களில் வாகனங்கள் நிறுத்துடமிடம் பொதுவாக உள்ளது.
பழைய அரசு மருத்துவமனையில் வார்டு இருக்குமிடம் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆடிட்டோரியம் பகுதியில் இருந்து வலதுபக்கம் திரும்பி நுரையீரல் வார்டு வரையிலும் கார்கள் இருபக்கமும் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது மகப்பேறு வார்டு எதிரிலுள்ள மாத்திரை கொடுக்கும் வார்டு பகுதியில் இருந்தே கார்கள் நிறுத்தப்பட்டதால் ரோட்டின் அகலம் பாதியாக சுருங்கி விட்டது.
இந்த ரோட்டில் தான் நோயாளிகளும் தள்ளாடி நடந்து செல்கின்றனர். வாகன ஓட்டிகளும் ஹாரன் அடித்தபடி செல்ல ஸ்ட்ரெச்சர், வீல்சேர்களில் நோயாளிகளை பணியாளர்கள் சிரமத்துடன் அழைத்துச் செல்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகள் நல வார்டு மற்றும் மகப்பேறு வார்டு பகுதியில் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
நிறுத்தப்பட்டுள்ள கார்களை முறையாக கண்காணித்து வெளிநபர்கள் நிறுத்தியிருந்தால் போலீசார் மூலம் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் இடநெருக்கடி குறையும்.