தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை - குருவாயூர் ரயில் வழக்கம் போல் இயங்கும்

மதுரை - குருவாயூர் ரயில் வழக்கம் போல் இயங்கும்

மதுரை - குருவாயூர் ரயில் வழக்கம் போல் இயங்கும்


ADDED : ஜூலை 25, 2025 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பராமரிப்பு பணிகளால் பகுதி ரத்து செய்யப்பட்ட மதுரை - குருவாயூர் - மதுரை ரயில்கள், வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது.

கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை - குருவாயூர் ரயில் (16327), நாளை (ஜூலை 26) வழக்கம்போல் குருவாயூர் வரை இயக்கப்படும். மறுமார்க்கம் ரயில் (16328), ஜூலை 27 அதிகாலை 5:50 மணிக்கு குருவா யூரில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து சேரும்.

நாளை, கேரள மாநிலம் ஆலப்புழா வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்ட திருவனந்தபுரம் - மதுரை 'அமிர்தா' ரயில் (16343), வழக்கமான பாதையில் இயக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us