தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/எழுத்தாணிக்கார தெருவில் 'மதுரை வாசிக்கிறது'

எழுத்தாணிக்கார தெருவில் 'மதுரை வாசிக்கிறது'

எழுத்தாணிக்கார தெருவில் 'மதுரை வாசிக்கிறது'


UPDATED : நவ 11, 2026 06:40 PM

ADDED : நவ 11, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 06:40 PM ADDED : நவ 11, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை மறுதினம் (நவ.13) புத்தகத் திருவிழா துவங்கி நவ.,23 வரை நடக்கிறது. இதையொட்டி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற 'மதுரை வாசிக்கிறது' நிகழ்ச்சி மதுரை எழுத்தாணிக்காரத் தெருவில் நேற்று நடந்தது.

எம்.பி., வெங்கடேசன் தலைமை வகித்தார். கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். அவர்கள் கூறியதாவது: இலக்கிய வாசகர்களுக்கு எழுத்தாணிக்கார தெரு முக்கியமானது. முந்தைய காலங்களில் திருக்குறள் போன்ற நுால்களின் முழுப்பிரதியை பெற பல மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். இந்த இலக்கிய பிரதிகளை வழங்கிய எழுத்தாணிக்காரர்கள் வாழ்ந்த தெரு என்பதால் இந்நிகழ்வு இங்கு நடக்கிறது. நாளைய புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளன என்றனர்.

டி.ஆர்.ஓ.,க்கள் ஜெயப்பிரீதா, சக்திவேல், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நுாலக அலுவலர் பழனிசாமி பங்கேற்றனர்.

ஆதரவற்றவர் மீட்பு



இப்பகுதியில் உடல்நலம் பாதித்து ஆதரவற்ற 57 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கலெக்டர் உத்தரவுபடி இந்திய செஞ்சிலுவை சங்க செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் முதலுதவி அளித்து விசாரித்தார். அவர் பெயர் பாரதிதாசன். குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்ட அவரது வயிற்றில் உருவான பெரிய கட்டியால் நடமாட முடியாமல் படுத்துக் கிடந்தது தெரிந்தது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us