/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா நாளை புதிய மேயர் தேர்வு
/
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா நாளை புதிய மேயர் தேர்வு
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா நாளை புதிய மேயர் தேர்வு
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா நாளை புதிய மேயர் தேர்வு
ADDED : அக் 16, 2025 02:26 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் இந்திராணி நேற்று தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய மேயரை தேர்வு செய்ய நாளை மாநகராட்சி அவசர கூட்டம் நடக்க உள்ளது.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்ததாக கூறப்படும் சொத்து வரி முறைகேடு தமிழகம் முழுதும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 5 மண்டலம், 2 நிலைக் குழுத் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் ராஜினாமா செய்தனர்.
மேயரின் கணவர் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சி உதவி கமிஷனர், பில் கலெக்டர்கள் என 16க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி மதுரை டி.ஐ.ஜி., அபினவ்குமார் தலைமையில் விசாரணை நடக்கிறது. சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் மேலிடம் கடுமை காட்டாமல் தாமதித்து வந்தது.
இந்நிலையில் அவர் சென்னைக்கு அழைக்கப்பட்டார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக அமைச்சர் நேருவிடம் கடிதம் அளித்தார். இதையடுத்து நாளை துணைமேயர் தலைமையில் மாநகராட்சி அவசர கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திராணியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது உறுதியானது.
நாளை நடக்கும் அவசரக் கூட்டத்தில் மேயர் ராஜினாமா ஏற்கப்பட்டு புதிய மேயர் தேர்வுசெய்யப்பட உள்ளார்.