/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
/
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனை
ADDED : ஜன 29, 2025 07:03 AM
மதுரை : திருநெல்வேலியைச் சேர்ந்த 30 வயது இளைஞரின் மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி வலிப்பு நோயிலிருந்து நிரந்தரமாக மீட்டு மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தென் தமிழகத்தில் செய்யப்பட்ட இந்த அரிய அறுவை சிகிச்சை குறித்து மூளை நரம்பியல் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் நரேந்திரன் கூறியதாவது: திடீரென ஏற்படும் வலிப்பு நோயால் இந்த இளைஞருக்கு பல விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்ட போதிலும் வலிப்பு குறையவில்லை. 3 டி எம்.ஆர்.ஐ., பெட் சி.டி., ஸ்கேன், வீடியோ இ.சி.ஜி., கருவிகள் மூலம் மூளைப்பகுதி ஆய்வு செய்யப்பட்டது. அச்சம், மகிழ்ச்சி முதலியவைகளை உணர்த்தும் மூளையின் அமிக்டாலா, டெம்போரல் லோப்கள், ஹிப்போகாம்பஸ்' பகுதிகளை மூன்று மணி நேர திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
மூளை திசுவிற்குள் வெட்டுக்கீறல்கள் செய்வது இந்த அறுவை சிகிச்சையில் தேவையில்லை. அதற்கு பதிலாக மூளையில் ஏற்கனவே இருக்கிற இடைவெளிகள் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை அணுகும் டாக்டர்கள் சேதமடைந்த திசுவை துல்லியமாக அகற்றினர். நரம்பியல் துறைத் தலைவர் விஜய் ஆனந்த், நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் செல்வமுத்துக்குமரன், முதுநிலை நிபுணர் செந்தில்குமார் குழுவினர் மூளையின் பிற கட்டமைப்புகளை பாதிக்காமல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.
அமிக்டாலா, டெம்போரல் லோப்கள், ஹிப்போகாம்பஸ்' பகுதிகளை நீக்கும் அறுவைசிகிச்சையானது பகுதியளவு வலிப்பு இருக்கிற நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இளைஞர் தற்போது இயல்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்றார்.

