/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ம.பி., முன்னாள் முதல்வர்
/
மதுரையில் ம.பி., முன்னாள் முதல்வர்
ADDED : ஜன 25, 2024 05:30 AM

மதுரை: மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று மதுரை வந்தார்.
மும்பையில் இருந்து விமானத்தில் வந்த அவரை கட்சியினர் வரவேற்றனர். பின்னர் பீபிகுளத்தில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், நகர் தலைவர் மகா சுசீந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மகாலட்சுமி, மாநில விவசாயப்பிரிவு துணைத் தலைவர் சசிராமன், மீனவர் பிரிவு துணைத்தலைவர் சிவபிரபாகர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கிருஷ்ணன், ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் விஸ்வநாத், மாவட்ட தலைவர் மணிவண்ணன், மண்டல் தலைவர் பிச்சைவேல், ஊடக பிரிவு வேல்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற சிவராஜ்சிங் சவுகானுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். அங்கு வழிபட்ட பின், தேனி ரோடு பகுதியில் நடந்த சக்திகேந்திரா கூட்டத்தில் பங்கேற்றார்.