தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரைக்குத் தேவை தொகுப்பு திட்டங்களே: அரசிடம் எதிர்பார்க்கும் தொழில்துறையினர்

மதுரைக்குத் தேவை தொகுப்பு திட்டங்களே: அரசிடம் எதிர்பார்க்கும் தொழில்துறையினர்

மதுரைக்குத் தேவை தொகுப்பு திட்டங்களே: அரசிடம் எதிர்பார்க்கும் தொழில்துறையினர்


ADDED : செப் 26, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: 'மதுரைக்கு தற்போது தேவை தனித் திட்டங்கள் அல்ல. ஒருங்கிணைந்த தொழில் வளர்ச்சித் திட்டமே' என்கின்றனர் தொழில் துறையினர்.

அவர்கள் கூறியதாவது: ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ உபகரணங்கள், உணவு பதப்படுத்துதல், மருந்து உற்பத்தி, பேக்கேஜிங், இன்ஜினியரிங் போன்ற துறைகளில் குறைந்தது இரண்டு பெரிய தொழில் முதலீடுகளை மதுரைக்கு கொண்டுவர வேண்டும். அதைச் சுற்றி நுாற்றுக்கணக்கான துணைத் தொழில்கள் உருவாகும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குறு, சிறு தொழில்கள் இருந்தாலும் அவை தனித்தனி சந்தைகளை விற்பனைக்காக நம்பியுள்ளன. பெரிய தொழிற்சாலைகள் மதுரைக்கு வந்தால் அவற்றுக்குத் தேவையான பேக்கேஜிங், பிரின்டிங், இயந்திர உதிரிபாகங்கள், பேப்ரிகேஷன், போக்குவரத்து, பராமரிப்பு, உணவு சார்ந்த துணைத்தொழில்கள் சேர்ந்து வளர வாய்ப்பு ஏற்படும். எனவே பெரிய முதலீடுகளை ஈர்ப்பதோடு உள்ளூர் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை அந்த முதலீடுகளின் விநியோகச் சங்கிலியில் இணைக்கும் வகையில் கொள்கையை உருவாக்க வேண்டும்.

சர்வதேச, சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மதுரை விமான நிலைய விரிவாக்கத்தை அடுத்த ஐந்தாண்டுகளின் முக்கியமான பொருளாதாரத் திட்டமாக நினைத்து மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் பொருட்களை விரைவாக வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பும் வாய்ப்பு அதிகரிக்கும். மருத்துவ சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, தொழில் முதலீடு, ஏற்றுமதிக்கும் இது பாலமாக அமையும்.

அதேபோல, மதுரையின் பாரம்பரிய தொழில்களையும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்க வேண்டும். உணவு தயாரிப்பு, ஜவுளி, அச்சு, பேக்கேஜிங், உலோக வேலைப்பாடு, கைவினை, வேளாண் சார்ந்த தொழில்கள் போன்ற துறைகளுக்கு குழும அடிப்படையில் பொது வசதி மையத்தை உருவாக்கினால் சிறு தொழில்களின் உற்பத்தி, ஏற்றுமதி திறன் அதிகரிக்கும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us