/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரோட்டோர மரங்களை துவம்சம் செய்வதால் புவி வெப்பமாக "பச்சை' கொடி காட்டும் பரிதாபம்
/
ரோட்டோர மரங்களை துவம்சம் செய்வதால் புவி வெப்பமாக "பச்சை' கொடி காட்டும் பரிதாபம்
ரோட்டோர மரங்களை துவம்சம் செய்வதால் புவி வெப்பமாக "பச்சை' கொடி காட்டும் பரிதாபம்
ரோட்டோர மரங்களை துவம்சம் செய்வதால் புவி வெப்பமாக "பச்சை' கொடி காட்டும் பரிதாபம்
ADDED : ஜூலை 28, 2011 03:19 AM
மதுரை : மதுரை மாநகராட்சியின் ரோட்டோர மரங்களை துவம்சம் செய்து வருவதால், நகரின் பசுமை கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.வெப்பமயமாதல் உலகின் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இன்றையபுவியில் 13.74 டி.செ., சராசரி வெப்பநிலை உள்ளது. அடுத்த 15 ஆண்டில், 15 டி.செ., ஆக மாறும் நிலையில், உலகின் செயல்பாடுகள் உள்ளன. இயற்கைக்கு மட்டுமின்றி, மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வெப்பமயமாதலை தடுக்க, உலக நாடுகள் எல்லாம் ஒருமித்த குரல் கொடுத்து வருகின்றன.மரம் வளர்ப்பு மட்டுமே இதற்க தீர்வு என்பதால், பசுமை விழிப்புணர்வு தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. 'வீடு சுத்தமாக இருந்தால், நாடு சுத்தமாக இருக்கும்,' என்பர். அது போலவே, 'ஊர் பசுமையாக இருந்தால் தான், உலகம் பசுமை அடையும்,' என்பதை அனைவரும் உணர வேண்டும்.வாகன புகையும், தூசும் படர்ந்த மதுரையில், மரங்கள் வளர்ப்பு கட்டாயமாக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து உள்ளது. இதற்காக சமூக ஆர்வலர்கள் முன்வந்துள்ளது பாராட்டக்கூடியது. அதே நேரத்தில், இருக்கும் மரங்களை அழிக்கும் கொடூரம் ஒரு புறம் அரங்கேறி வருகிறது.
மாநகராட்சியின் ரோட்டோர மரங்களில், 'போர்டு வைப்பது, ஆணி அடித்து பலகையை தொங்க விடுவது, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் குப்பை தொட்டியாக பயன்படுத்துவது,' போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. சுயலாபத்திற்கு மரங்கள் சூறையாடப்படுவதால், நகரின் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.மரக்கன்றுகள் நட மனமில்லை என்றால், இருக்கும் மரங்களையாவது விட்டு வைக்கலாமே? உதவி செய்யாமல், தொல்லை தரும் இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் அனுமதிப்பதும் வேதனை. மரம் வளர்ப்பில் காட்டும் ஆர்வத்தை, இருக்கும் மரங்களை பாதுகாப்பதிலும் காட்ட வேண்டும்.பிறருக்காக இல்லாவிட்டாலும், நம்மை நாம் பாதுகாக்க, மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். பசுமைக்கு குரல் கொடுக்க வேண்டுமே தவிர, பசுமையை அழிக்க 'பச்சை' கொடி காட்டக்கூடாது.