ADDED : ஜூலை 28, 2011 03:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றம் : திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்தவர் காமாட்சி.
இவர்
நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு
சென்று திரும்பினார். வீட்டினுள் பீரோவில் இருந்த ஒன்பது பவுன் நகைகளை,
அதே பகுதியை சேர்ந்த எம்.ஏ., பட்டதாரியான மீனாட்சி(31)
திருடிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து திருப்பரங்குன்றம் போலீசில்
ஒப்படைத்தனர். மீனாட்சியை கைது செய்த போலீசார் அவர் திருடிய நகையை
மீட்டனர்.