/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறையில் நகர செயலாளர் மதுரை தி.மு.க., ஆலோசனை
/
சிறையில் நகர செயலாளர் மதுரை தி.மு.க., ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2011 03:38 AM
மதுரை : மதுரை தி.மு.க., நகர செயலாளர் தளபதி உட்பட முக்கிய நிர்வாகிகள்
சிறையில் உள்ள நிலையில், நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது.தீர்மானக்குழு
தலைவர் பொன் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
மேயர் தேன்மொழி,
முன்னாள் நகரச் செயலாளர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். தி.மு.க.,
நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் அ.தி.மு.க., அரசை கண்டித்து
ஆக., 1ல் வடக்கு வெளிவீதி தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது
போன்ற தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. மற்ற இடங்களில் யார்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என கட்சி தலைமை அறிவித்தது. மதுரை உட்பட
சில ஊர்களில் யார் தலைமை வகிப்பது என அறிவிக்கப்படவில்லை.