/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடவூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்
/
கடவூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்
ADDED : ஜூலை 28, 2011 03:40 AM
ஊமச்சிகுளம் : சத்திரப்பட்டி கடவூர் வல்குத்து ஓடை பகுதியில் இருந்து
நேற்று துர்நாற்றம் வீசியது.
அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஓடை அருகில்
சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி
சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர்
பாலாஜி மற்றும் சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஓடையில்
சுமார் 30 வயதுடைய வாலிபர் இறந்து கிடந்தார். வலது கை, கழுத்து, நெஞ்சு என
ஐந்து இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன. ரோஸ் கலரில் வெள்ளை கோடுபோட்ட
சட்டையும், ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். உடல் அழுகிய நிலையில்
இருந்ததால் கொலை செய்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என போலீசார்
தெரிவித்தனர். மர்ம நபர்கள் கொலை செய்து பிரேதத்தை அங்கேயே போட்டுச்
சென்றிருக்கலாம் என விசாரித்து வருகின்றனர்.