/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெப்பமயமாதலை தடுக்கஐந்து லட்சம் மரக்கன்றுகள்
/
வெப்பமயமாதலை தடுக்கஐந்து லட்சம் மரக்கன்றுகள்
ADDED : ஆக 01, 2011 02:08 AM
மதுரை:''இந்தாண்டு புவிவெப்பமயமாதலை தடுக்க தமிழகத்தில் ஒரே நாளில் ஐந்து
லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்,'' என, லயன்ஸ் கிளப் உலக துணைத் தலைவர்
வென்மேடன் பேசினார்.
மதுரை சிங்கராயர் காலனி ஆண்ட்ரூஸ் ஆஸ்பத்திரியில்,
கிளப் சார்பில் மாவட்ட ஆளுநர் நந்தகுமார் தலைமையில், இலவச புற்றுநோய்
கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு மைய திறப்பு விழா நடந்தது. அகில உலக துணைத்
தலைவர் வென்மேடன் திறந்து பேசுகையில், ''கண்ணொளி திட்டத்திற்கு கிளப், 144
மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது. மாலைக்கண் நோய் தற்போது லத்தீன்
அமெரிக்க நாடுகளில் முழுமையாக ஒழிக்கப்பட்டது. ஆறு மில்லியன் பேருக்கு
கண்புரை ஆபரேஷன் நடத்தி உள்ளோம். இந்தாண்டு வெப்பமயமாதலை தடுக்க, ஆக. 25
முதல் உலகம் முழுவதும் மரக்கன்றுகளை நட உள்ளோம். சென்னையில் கிளப் தலைவர்
வின்குன்டாம் இதை துவக்குகிறார், என்றார். கூட்டு மாவட்ட தலைவர் சம்பத்,
முன் னாள் பன்னாட்டு இயக்குனர் ராமசாமி, துணை ஆளுநர்கள் முருகேசன், முத்து ராமலிங்கம், பி.ஆர்.ஓ., நெல்லை பாலு, செயலாளர் பிரசன்னகுமார், மாநாட்டு செயலாளர் ரகுவரன் பங்கேற்றனர்.