sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

"ரகுப்ரியா' ராகத்தால் அசத்திய மல்லாடி சகோதரர்கள்

/

"ரகுப்ரியா' ராகத்தால் அசத்திய மல்லாடி சகோதரர்கள்

"ரகுப்ரியா' ராகத்தால் அசத்திய மல்லாடி சகோதரர்கள்

"ரகுப்ரியா' ராகத்தால் அசத்திய மல்லாடி சகோதரர்கள்


ADDED : ஆக 06, 2011 03:47 AM

Google News

ADDED : ஆக 06, 2011 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் ராகப்பிரியா சார்பில் நடக்கும் இசை விழாவில் நேற்று, மல்லாடி சகோதரர்கள் ஸ்ரீராம் பிரசாத், ரவிகுமார் கடினமான 'ரகுப்ரியா' ராகம் பாடி, ரசிகர்

களை வியப்பில் ஆழ்த்தினர். இவர்கள், ஆந்திரா இசையோகி ஸ்ரீபாதம் பினாகயாணியிடம் இசை பயின்றவர்கள். நேற்று மாலை, மல்லாடி சகோதரர்கள் கல்யாணி ராக அடதாள வர்ணத்தோடு கச்சேரியை துவக்கினர். முத்துச்சாமி தீட்சிதரின் சக்ரவாக ராகம், ஆதிதாளத்தில் அமைந்த 'கஜானநயுதம் கணேஸ்வரம்' பாடல் மூலம் விநாயகரை இசையில் வழிபட்டனர். தியாகராஜரின் தன்யாசி ராகக் கீர்த்தனை, 'ஸ்யாம சுந்தராங்க சகல சக்தியு நீவே' என பாடியபோது, சரியான மொழி உச்சரிப்பு இருந்தது. 'தன்யாசி' ராகத்தின் கற்பனா ஸ்வரங்களை அழகான மாலையாக்கி ரசிகர்களுக்கு அணிவித்தனர். 'மாருபல்க' எனத் துவங்கும் தியாகராஜர் கிருதியும் உள்ளத்தை தொட்டது.

இசை கலைஞர்களிடம் எதிர்பார்ப்பதே புதிய படைப்புகள்தான். மல்லாடி சகோதரர்கள் இதையும் நிறைவேற்றினர். மோகன ராகத்தில் 'நரசிம்மா ஆகச்ச' என்ற முத்துசாமி தீட்சிதர் கிருதியை அற்புதமாக மிஸ்ரசாபு தாளத்தில் பாடியபோது, நரசிம்ம மூர்த்தியை இசை ரூபத்தில் வணங்க வாய்ப்பு கிடைத்தது.தொடர்ந்து 42 வது மேளகர்த்தாவான 'ரகுப்ரியா' ராகத்தை மிக நேர்த்தியாக, கவனமாக பாடினர். விவாதி மேளமான ரகுப்ரியாவை பாடுவது கடினம். அதை வயலின்-'எம்பார்' கண்ணன் துணையுடன் அற்புதமாக நிகழ்த்தினர். அன்னமார்ச்சார்யா இயற்றிய 'பளிபளி ராம-பந்தமுராமா' என்ற கிருதியை 'சூர்யகுல வம்ச பெருமை' நிறைந்த செய்திகளை ராகபாவ தாளத்தில் வழங்கி, ரசிகர்களின் பாராட்டு பெற்றனர்.மிருதங்கம்- பல்லடம் ரவி, கடம்- திருச்சி முரளி பங்களிப்பு சிறப்பு. இன்று மாலை 6 மணிக்கு ரஞ்சனி, காயத்ரி பாடுகின்றனர்.






      Dinamalar
      Follow us