ADDED : ஆக 07, 2011 02:55 AM
மதுரை:மதுரை மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிட,
பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட
மாணவர்களுக்குகல்விஉதவித் தொகைவழங்கப்பட உள்ளது. இதற்கான விபரங்கள் இணைய
தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.அரசு பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள்,
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும்
மாணவர்கள், படிப்புக்கு ஏற்ப கல்வி உதவித் தொகையை (புதியவை, புதுப்பித்தல்
ஆகியவை) பெற முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 60 சதவீதம் குறையாமல்
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 11ம் வகுப்பு மாணவரின் பெற்றோருக்கு ஆண்டு
வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகக்கூடாது. இவர்கள் விண்ணப்பத்தை கல்வி
நிறுவன தலைவரின் கையெழுத்துடன், கல்வி, வருவாய், ஜாதிச் சான்றுடன் ஆக.,
15ம் தேதிக்குள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்க
வேண்டும். ஏற்கனவே கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் புதுப்பித்தல் உதவித்
தொகை மட்டுமே கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களும்
விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தின் ஆதிதிராவிடர் நலஅலுவலகத்தில் வழங்க
வேண்டும், என கலெக்டர்
சகாயம் தெரிவித்துள்ளார்.