நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் பாண்டியவரதராஜன்.
இவருக்கு
சொந்தமான ஆம்னி வேனில், நேற்று மாலை 4.20 மணிக்கு கடைக்கு சென்றுவிட்டு
இவரது மனைவி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். டிரைவர் திருப்பதி
ஓட்டினார்.யானைக்கல் மேம்பாலம் ஏறும் போது, பெட்ரோல் டியூப் 'லீக்'காகி,
வேனின் பின்பகுதியில் தீப்பிடித்தது. அதிர்ச்சியடைந்த இருவரும் இறங்க,
வேனின் உட்பகுதியில் தீ பரவியது. நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி
சுரேஷ்கண்ணன் தலைமையில் தீ அணைக்கப்பட்டது. அவர் கூறுகையில், ''வேனின்
பின்பகுதியில் காஸ் நிரப்பிய சிலிண்டரும் இருந்தது. தீயை உடனடியாக
அணைத்ததால், சிலிண்டர் வெடிப்பது தடுக்கப்பட்டது,'' என்றார்.