/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இடத்தகராறில் அ.தி.மு.க., கிளை செயலாளர் கொலை
/
இடத்தகராறில் அ.தி.மு.க., கிளை செயலாளர் கொலை
ADDED : ஆக 22, 2011 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே டி.அரசபட்டியைச்
சேர்ந்தவர் கருப்பையா(41).இவர் அ.தி.மு.க., கிளை செயலாளராக
உள்ளார்.இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த மாரித்தேவருக்கும் இடத்தகராறு
இருந்தது.
நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
மாரித்தேவர், அவரது மகன்கள் மகேஷ்வரன், உத்திரகுமார் ஆகியோர், கருப்பையாவை
ரைஸ்மில் அருகே வெட்டினர். இதில் சம்பவ இடத்தில் கருப்பையா இறந்தார்.
திருமங்கலம் டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் வேணுகோபால் சம்பவ
இடத்தை பார்வையிட்டனர். மகேஷ்வரன், உத்திரகுமாரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான மாரித்தேவரை தேடி வருகின்றனர்