/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை அளிக்க எதிர்ப்பு
/
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை அளிக்க எதிர்ப்பு
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை அளிக்க எதிர்ப்பு
சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை அளிக்க எதிர்ப்பு
ADDED : ஆக 22, 2011 02:32 AM
மதுரை : சித்தா, ஆயுர்வேதடாக்டர்கள் அலோபதி சிகிச்சை அளிக்க
அனுமதிக்கக்கூடாது; எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் அந்த பாடத்திட்டங்களை
நீக்க வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கம்வலியுறுத்தியுள்ளது.இச்சங்கம்
சார்பில் மதுரையில், நேற்று திருத்தப்பட்ட காசநோய் சிகிச்சை மற்றும்
கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்
டாக்டர் அமானுல்லா வரவேற்றார். செயலாளர் ஜெயாலால் முன்னிலை வகித்தார்.
கூட்ட முடிவுகள் குறித்து மாநில தலைவர் டாக்டர் சடகோபன் கூறியதாவது :புதிய
தலைமை செயலக கட்டடம் உயர்தர ஆஸ்பத்திரியாக மாற்றப்படும் மற்றும் மருத்துவ
வாரியம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
வாரியம் அமைப்பதால், மலைப்பகுதிகள், கிராமங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை
இருக்காது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் 30 படுக்கைகளாக மாற்றப்படும் என
அறிவித்திருப்பதும் பாராட்டுக்குரியது. போலி டாக்டர்களை ஒழிக்க கடுமையான
சட்டம் இயற்றவேண் டும். சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை
அளிப்பதை எதிர்க்கிறோம்.
இப்பாடத் திட்டங்களைமருத்துவ பல்கலையில் இருந்து நீக்கவேண்டும் என
எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தரிடம் வலியுறுத்தி உள்ளோம். ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., போல், மருத்துவ துறைக்கென இந்தியன் மெடிக்கல் சர்வீஸ் என்ற புது
'கேடரை' உருவாக்க வேண்டும். இனி வரும் காலங்களில் தனியார்
ஆஸ்பத்திரியிலும் காச நோய்க்கு இலவச மருந்துகள் கிடைக்க உள்ளதால், மூன்று
நிமி டங்களுக்கு 2 பேர் இந்நோய்க்கு பலியாவதை தடுக்க முடியும், என்றார்.
அரசு டாக்டர்கள் வரவேற்பு: அரசு டாக்டர்கள் சங்கச்செயலாளர் செந்தில்
அறிக்கை : மருத்துவ வாரியம் அமைப்பதால் இனி டாக்டர்களை நியமனம் செய்வதில்
காலதாமதம் ஏற்படாது. டாக்டர் பற்றாக்குறையும் இருக்காது. அனைத்து
மாவட்டங்களுக்கும் பரவலாக டாக்டர்கள் நியமிக்கப்படுவர். நர்சுகள்,
மருந்தாளுநர் போன்ற பிற பணியாளர்களும் நியமிக்கப்படுவதால், புதியஆஸ்பத்திரி
துவங்க உதவியாக இருக்கும், என தெரிவித்துள்ளார்