ADDED : செப் 17, 2011 03:11 AM
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் போதையில் தகராறு செய்த மகனை கடப்பாரையால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.பனையூர் வடக்கு தெருவை சேர்ந்த மாயழகன் மகன் லட்சுமணன் (எ) கர்ணன், 24.
இவர், மது அருந்தி விட்டு சாலையில் செல்வோரிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த கர்ணன், தூங்கியவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமுற்ற மாயழகன் கடப்பாரையால் கர்ணனை குத்திக் கொலை செய்தார்.உடலை இரவில் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்தனர். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டுகாட்டிற்கு சென்ற போலீசார் பாதி எரிந்த நிலையில் உடலை கைப்பற்றி, அங்கு பிரேத பரிசோதனை செய்தனர். தப்பிய மாயழகனை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். மாயழகன் மனைவி ராஜலட்சுமி, மூத்த மகன் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடக்கிறது