தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை வடக்கு 'சென்டிமென்ட்' ;வேட்பாளர் சரவணன் நம்பிக்கை

 மதுரை வடக்கு 'சென்டிமென்ட்' ;வேட்பாளர் சரவணன் நம்பிக்கை

 மதுரை வடக்கு 'சென்டிமென்ட்' ;வேட்பாளர் சரவணன் நம்பிக்கை


ADDED : ஏப் 04, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் மனுதாக்கல் செய்த பின் கூறியதாவது: இத்தொகுதியில் யார் வெற்றி பெறுவாரோ அந்த கட்சிதான் ஆட்சியை பிடிக்கும். அதுபோல் இத்தொகுதியில் நிச்சயம் இரட்டை இலை மலரும். நிச்சயம் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இத்தொகுதியில் அம்மா இல்ல திட்டம் மூலம் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்கப்படும். மே மாதம் பழனிசாமி ஆட்சி அமைப்பார். அந்த மாதமே பத்தாயிரம் ரூபாய் நிச்சயமாக வழங்கப்படும் என்றார்.

பா.ஜ., மாரி சக்கரவர்த்தி, மூ.மூ.க., பகவதி, அவைத் தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர் பாஸ்கரன் உடன் இருந்தனர்.

சரவணன், மனைவி கனிமொழி பெயரில் உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ.21.84 கோடி. சரவணன் பெயரில் கடன் ரூ.48.88 லட்சம், மனைவி பெயரில் கடன் ரூ.98 லட்சம் உள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது குடும்பத்தினரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.17 கோடியே 49 லட்சத்து 76 ஆயிரத்து 528 இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அதைவிட தற்போது ரூ.4.34 கோடி அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us