ADDED : மார் 15, 2024 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பீஹாரில் 33வது ஆடவர் கபடி போட்டி மார்ச் 16 முதல் 20 வரை நடக்க உள்ளது. அதில் தமிழ்நாடு அணிக்கான பொறுப்பு தேர்வு சேலத்தில் நடந்தது. 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, தேவகோட்டை ராஜராஜன் கல்லுாரியில் கடந்த 10 நாட்களாக பயிற்சி முகாம் நடந்தது.
தமிழக அணிக்கான 12 பேர் கொண்ட இறுதி பட்டியலில் மதுரை கேந்திரிய வித்யாலாயா திருப்பரங்குன்றம் பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர் மகேஸ்வரன் தேர்வானார். தமிழ்நாடு கபடி கழக தலைவர் சோலை ராஜா, செயலாளர் சபியுல்லா, மதுரை மாவட்ட கபடி கழக செயலாளர் அகஸ்டின், தேர்வு அமைப்பாளர் மனோகரன், இந்திய வீரர் கர்ணன், பயிற்சியாளர் மோகன்லால், உடற்கல்வி ஆசிரியர் ஹேமந்சிங் பாராட்டினர்.

