/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்ற மதுரை வீரர்கள்
/
தேசிய டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்ற மதுரை வீரர்கள்
தேசிய டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்ற மதுரை வீரர்கள்
தேசிய டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்ற மதுரை வீரர்கள்
ADDED : பிப் 13, 2024 04:02 AM

மதுரை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை வீரர், வீராங்கனைகள் மாநில, தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றனர்.
கோவையில் நடந்த பாரதியார் தின மாநில சாம்பியன்ஷிப் போட்டியின் 19 வயது ஒற்றையர் பிரிவில் சமீனா ஷா தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் சமீனா ஷா, ஹர்ஷிகா தங்கப்பதக்கம் வென்றனர். திருச்சியில் நடந்த குடியரசு தின போட்டியின் 17 வயது ஒற்றையர் பிரிவில் ஆராதனா தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் ஆராதனா, சிவாத்மிகா தங்கம் வென்றனர்.
புதுக்கோட்டையில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் ஒற்றையர் பிரிவில் புவனிதா தங்கம் வென்றார். சென்னையில் நடந்த தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் நடத்திய போட்டியில் 11 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவில் அஸ்வஜித் தங்கம், பிரணவ் பாலாஜி வெண்கலம் வென்றனர். மத்திய பிரதேசம் இந்துாரில் நடந்த 85வது சப் ஜூனியர் மற்றும் கேடட் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11 வயது பிரிவில் அஸ்வஜித் தங்கம் வென்று தேசிய சாம்பியன் பட்டம் வென்றார்.
19 வயது மகளிர் பிரிவில் சமீனாஷா வெள்ளி பதக்கம் வென்றார். டில்லியில் தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய 17 வயது மகளிர் பிரிவு போட்டியில் ஆராதனா வெண்கல பதக்கம் வென்றார். ஹரியானாவில் நடந்த சி.ஐ.எஸ்.சி.இ.,போட்டியில் 17 வயது பிரிவில் தான்யா, வர்ஷா வெண்கல பதக்கம் வென்றனர். தேசிய விளையாட்டு வீரர் கல்யாணராமன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர் பாலாஜி பாராட்டினர்.