UPDATED : ஏப் 29, 2026 10:41 PM
ADDED : ஏப் 29, 2026 10:20 PM
கோயில் * சித்திரை பெருவிழா 12ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகள் வந்து பழைய திருக்கல்யாண மண்டபம் வந்து பதினாறு கால் மண்டபம் செல்லுதல், இரவு 7:00 மணி, உச்சிக்காலத்தில் பொற்றாமரைக்குளத்தில் தீர்த்தம், தெய்வேந்திர பூஜை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனியாய் பெருமாளும் ஆடி வீதி 16 கால் மண்டபத்தில் இருந்து விடைபெறுதல், இரவு 10:15 மணி.
* சித்திரை பெருவிழா 4ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் சுவாமி தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளல், நள்ளிரவு 1:00 மணி, மூன்று மாவடியில் எதிர்சேவை, அதிகாலை 5:30 மணி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பெருமாள் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்துார் சூடிகொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை சாற்றி பக்தர்களுக்கு சேவை சாதித்தல், வெட்டிவேர் சப்பரம், இரவு 8:30 மணி.
* குரு வார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மகா பெரியவர் விக்ரகம் சிறப்பு பூஜை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.
பக்தி சொற்பொழிவு * திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் அடிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி.
* கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் -- சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.
விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளம், குழு விளையாட்டு போன்ற கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
