தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஏப் 30, 2026 08:04 PM

ADDED : ஏப் 30, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2026 08:04 PM ADDED : ஏப் 30, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மே 1க்குரியது

கோயில்

* அழகர்கோவில் சித்திரை பெருவிழா - 5ம் நாள்: தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் முன்பு ஆயிரம் பொன்சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளல், அதிகாலை 2:30 மணி, தங்கக்குதிரையுடன் வைகை ஆற்றில் எழுந்தருளல், அதிகாலை 5:35 மணிக்கு மேல் 5:55 மணிக்குள், ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம், தீர்த்தவாரி, மதியம் 12:00 மணி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளல், இரவு 9:00 மணி.

* உற்ஸவம்: கள்ளழகர் மண்டகப்படி, வைகை வடகரை மெயின் ரோடு, ஆழ்வார்புரம், மதுரை, கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளல், ஏற்பாடு: ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜ சபா, காலை 6:00 மணி.

* சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு குதிரை வாகனத்தில் அழகர் அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* புத்த பூர்ணிமா சிறப்பு சர்வ சமய அமைதி பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் முருகன், சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம், மாலை 6:00 மணி.

பொது

* ஆண்டுவிழா, கவிதை வாசிப்பரங்கம், விருது வழங்கல்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் வரதராஜன், சிறப்புரை: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் சுலேகாபானு, மதுரை இலக்கியப் பேரவை தலைவர் சண்முகதிருக்குமரன், ஏற்பாடு: நிலா இலக்கிய மன்றம், மாலை 5:30 மணி.

* சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோடி லிங்க தரிசனம்: கார்த்திக் தியேட்டர், புதுார், மதுரை, ஏற்பாடு: பிரம்மாகுமாரிகள், காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை.

விளையாட்டு

* 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us